Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Thursday, December 23, 2010

Aptitude5: Calender Problems solve செய்வது எப்படி???

27 /10 /1989 இந்த தேதிக்கு உங்களால் சரியான  கிழமையை கூற முடியுமா. கொஞ்சம் இந்த பதிவை படியுங்கள் பின்னர் நீங்கள் எந்த ஆண்டுக்கும் ஒரே நிமிடத்தில் இதனை கூற முடியும்.



வணக்கம் நண்பர்களே நான் எழுதிய கடந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த, படித்த, தொடர் பதிவு இடப்போகும் அனைவர்க்கும் என் உளமார்ந்த  நன்றிகள். உங்களின் ஆதரவை  என்னுடைய இந்த aptitude பதிவுகளுக்கும நான் எதிர் பார்க்கிறேன்.

இப்போது 27 /10 /1989 இன் கிழமையை கண்டு பிடிப்போம். இதற்கு உங்களுக்கு கொஞ்சம் ஞாபக சக்தியும், கூடவே எளிய கணித திறமையும் இருந்தால் போதுமானது.

ஸ்டெப்   A :  
கொடுத்துள்ள வருடத்தை 7ஆல் வகுத்து மீதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கவனிக்க:---- இங்கு நீங்கள் ஈவு பற்றி கவலைப்பட தேவை இல்லை.

1989/7 க்கு மீதி 1 .  

ஸ்டெப் B : 

இப்போது  அதே வருடத்தை 4 ஆல் வகுத்து ஈவினை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
கவனிக்க:---- இங்கு நீங்கள் மீதி  பற்றி கவலைப்பட தேவை இல்லை.

1989/4 க்கு ஈவு 497.

இப்போது கிடைத்த விடையை மீண்டும் 7 ஆல் வகுக்கவும், வகுத்து மீதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கவனிக்க:----இந்த இடத்தில ஈவினை மறந்து விடவும்.

497/7 க்கு மீதி 0.

ஸ்டெப் C:

இப்போது உங்கள் தேதியை நீங்கள் 7ஆல் வகுக்கவும். இங்கு  மீதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கவனிக்க:---- இங்கு நீங்கள் ஈவு பற்றி கவலைப்பட தேவை இல்லை.
                :---- தேதி 7 ஐ விட சிறியதாக இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளவும் 

27 /7 க்கு மீதி 6 . 

ஸ்டெப் D:
 
இந்த இடத்தில் நாம் நமது மாதத்திற்கு code ஒன்றினை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது லீப் வருடம் மற்றும் சாதாரண வருடங்களுக்கு என உள்ளது.

Month Ordinary Year Code Leap Year Code
January 0 0
February 3 3
March 3 4
April 6 0
May 1 2
June 4 5
July 6 0
August 2 3
September 5 6
October 0 1
November 3 4
December 5 6

லீப் வருடமா என்பதை தெரிந்து கொள்ள அந்த வருடத்தை நான்கால் வகுக்கவும். மீதி வரவில்லை எனில் அது லீப் வருடம்.


நீங்கள் இதனை எளிதாக நினைவில் கொள்வது மட்டும் உங்கள் வேலை. உங்களுக்கு எளிதாக புரிகிற முறையில் இதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

இப்போது நமக்கு வேண்டிய அக்டோபர் மாதத்தின் code ௦(ordinary year) ஆகும்.

Last Step: 
ordinary year  = (A+B+C+D-2)/7
Leap Year= (A+B+C+D-3)/7

இதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளவும்.

இப்போது  நமது விடைகளை மேலே உள்ள formula வில் apply செய்யவும்.
A=1
B=0
C=6
D=0
இது ordinary year எனவே
(1 +0 +6 +0-2 )/7= 5/7
.
இங்கு தான் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. இந்த மாதிரி விடையின் பின்னத்தில் மேலே உள்ளது தான் நமது விடை. ஆனால் எப்படி அதற்கு எப்படி நீங்கள் தேதியை கண்டுபிடிக்க வேண்டுமென யோசிக்கிறீர்களா. இதற்கும்  ஒரு சிறிய விஷயம் நினைவில் கொள்ள வேண்டியது உள்ளது (மறுபடியுமா!!).

0-Sunday
1-Monday
2-Tuesday
3-Wednesday
4-Thursday
5-Friday
6-Saturday
7-Sunday. 
எனவே 7 ஐ நீங்கள் பூஜ்ஜியம் என இங்கே வைத்து கொள்ளவும்.


இப்போது உங்கள் தேதிக்கான கிழமை
"வெள்ளிக்கிழமை ".

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்போது வரும் புது வருடத்திற்கான முதல் தேதியை காணலாம். 

1/1/2011.
A= 2011/7= மீதி 2.
B=2011/4= ஈவு 502, 502/7= மீதி 5.
C=1/7= மீதி 1.
D=  2011 Ordinary Year எனவே code 0.

விடை= (A+B+C+D-2)/7=(2+5+1+0-2)/7=6/7 . ஆறு= சனிக்கிழமை. 
சரியாக வந்து விட்டதா. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி: இதுதான் மிக முக்கியம் பின்னத்தின் மேலே உள்ள எண் மைனஸ்(-5 /7). ஆக இருந்தால், விடையானது 7-5=2 . இரண்டாவது எண் "செவ்வாய்க்கிழமை" இப்படி வைத்துக் கொள்ளவும். 

ஏதேனும் புரியாவிடில் அல்லது விடை தவறாக இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.






◘பலே ட்வீட்◘
 
தொடர்ச்சியான ரெய்டுகளுக்காக கலைஞருக்குப் பாராட்டு விழா  எடுக்கும் எண்ணம் இருக்கிறதா ?# ஜெகத்ரட்சகன்
                                                                                                                      -thippetti@twitter.com
ஓடும் பேருந்தில் இருந்து ரேசன் கடையில் விற்கும் பொருள் வரை அனைத்திலும் இருக்கும் கருணாநிதி படம் டாஸ்மாக் சரக்கில் மட்டும் இல்லை # டவுட்டு
                                                                                                                    -KamaRaj@facebook.com


8 comments:

ஆமினா said...

கிழமை பத்தி இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன். லீப் வருடம் கண்டுபிடிப்பது ஏற்கனவே 4ம் வகுப்பில் சொல்லி கொடுத்ததை நினைவுபடுத்திட்டிங்க!!! நல்ல பதிவு

ஆமாம் ஒரு சின்ன சந்தேகம். வாசகர்களுக்கும் கணக்கில் ஏதேனும் சந்தேகம் வந்தால் உங்களிடம் கேக்கலாமா??!!!

வைகை said...

புதுசு புதுசா சொல்றிங்க! மண்டைல ஏறனுமே!

வைகை said...

தமிழ்மண வோட்டு பெட்டி இன்விசிபிலா இருக்கு சரி பண்ணுங்க

பலே பிரபு said...

@ஆமினா
//வாசகர்களுக்கும் கணக்கில் ஏதேனும் சந்தேகம் வந்தால் உங்களிடம் கேக்கலாமா??!!!//

அது உங்கள் கடமை தோழி. ஆனால் ஒரு விசயம் நான் நமது பாடப்புத்தகங்களில் உள்ள கணக்குகளை(integration, differentiation,and etc ) அதிகமாக முயற்சி செய்வது இல்லை. வாசகர்கள் கேட்டால் நான் முயற்சி செய்கிறேன் . aptitude பற்றிய எந்த கேள்விகளுக்கும் நான் எப்போதும் தயார்.

பலே பிரபு said...

@வைகை
புதியதாக எதையும் கூறவில்லை நண்பரே நான் கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்கிறேன். இனிமேல் என்னுடையவை வரலாம். அப்புறம் தலைல கிட்னி இருந்தா ஏறும் பாஸ். இருக்கா???

பலே பிரபு said...

@வைகை
தமிழ் மணம் வாக்களிப்பு பட்டியை இப்போது சரி செய்து விட்டேன்.

மகாதேவன்-V.K said...

மகாதேவன்-V.K said...
//பலே பாண்டியா said...
இந்த வார ஆனந்த விகடனில்(29/12/2010) உங்கள் வலைப்பூவினை தகவல் கடல் என கூறி உள்ளனர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.//


உண்மையில் இந்த வாரமா அல்லது வரப்போகும் வாராமா நண்பா? திகதியை சரிபார்த்து மீண்டும் கூறவும்

ஆனந்தி.. said...

aptitude ங்கறது சவாலான விஷயம்...அதை உங்கள் பதிவுகளில் எளிதாய் கற்று தர முயற்சி பண்றதுக்கு பிடிங்க என் பாராட்டுக்களை..முன்னாடி நீங்க வெளியிட்ட அந்த square root பதிவு கலக்கல் சகோ....நானும் என் ப்ளாகில் உங்க ப்லாக் கை என் topper லிஸ்ட் இல் அறிமுகபடுத்திருக்கேன்....வாழ்த்துக்கள்...தொடர்ந்து இப்படி கலக்குங்க..

Post a Comment

தமிழ் எழுதி

Followers