Puzzles க்கு தமிழ்ல விளங்கா செய்தின்னு அர்த்தமாம்.நாம இங்க அதெல்லாம் தமிழ்ல பாக்கலாம்.....
இப்போ உங்க அறிவை(?) நான் சோதிக்க போறேன்.
மளமளன்னு ஆன்சர்ஸ் சொல்லுங்க.
கமெண்ட் பாக்ஸ்ல உங்க விடைகளை போடுங்க. நான் விடைகள் எல்லாம் அடுத்த இடுகைல சொல்றேன். அப்புறம் 5 சரியான விடை சொல்றவங்களுக்கு "மிஸ்டர் I .Q " னு விருது கொடுக்கலாம்னு இருக்கேன்.
1 . ஒரு கடைல ஒரு சாக்லேட் 1 ரூபாய். நீங்க 3 காலி பேப்பர்ஸ் கொடுத்தா (சாக்லேட் கவர் பாஸ் வேற நினைக்காதிங்க )ஒரு புது சாக்லேட் கிடைக்கும். உங்ககிட்ட 15 ரூபாய் இருந்தால் உங்களால அதிகபட்சம் எத்தனை சாக்லேட் வாங்க முடியும்??
2 . ஒரு இடத்துல 3 பழக்கூடைகள் இருக்கு. 3 ளையும் ஒண்ணுல ஆரஞ்சு, இன்னொன்னுல ஆப்பிள், கடைசியில ஆரஞ்சு & ஆப்பிள் ரெண்டும் இருக்கு. இருக்கு ஆனா எல்லாமே சரியான கூடைல இல்ல, மாறி இருக்கு. இப்போ உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு ஒரு கூடைல இருந்து ஒரு பழம் மட்டும் எடுக்கலாம். மீதி ரெண்டு கூடைலயும் எந்தந்த பழம் இருக்குனு சரியா சொல்லிடனும். சொல்லுங்க பாக்கலாம்.
3. 2+3=10
7+2=63
6+5=66
8+4=96
9+7=???
இதுக்கு சரியான விடை சொல்லுங்க
4 . இது ரொம்ப சுலபம், கல்யாணம் ஆனவங்க சுலபமா பதில் சொல்லலாம்.
ஒரு ஆண், ஒரு சேலை, ஒரு ஜாக்கெட் ரெண்டும் 110 ரூபாய்க்கு வாங்குறார். ஜாக்கெட்டை விட சேலை 100 ரூபாய் அதிகம். இப்போ தனித்தனியா ரெண்டுக்கும் விலை சொல்லுங்க பாக்கலாம்??
5. எட்டு "8" களை பயன்படுத்தி ஒரு 1000 உருவாக்குங்க!!!
6. ஒரு கிரிக்கெட் மேட்ச் நடந்துகிட்டு இருக்கு. கிரௌன்ட்ல டோனியும், யுவராஜும் இருக்காங்க. ரெண்டு பேருமே 94 ரன் . மேட்ச் விண் பண்ண இன்னும் 7 ரன் வேணும் மீதி மூணு பால் தான் இருக்கு. மேட்ச் முடிஞ்சு பார்த்தா ரெண்டு பேருமே சதம் போட்டு இருக்காங்க எப்படி பாஸ்??
7. ஒரு சதுரங்க அட்டையில் எத்தனை சதுரங்கள் இருக்கு?
8. இதுவும் ரொம்ப சுலபம் 2/10=2 எப்படி??
9. இந்த வரிசையில் அடுத்து என்ன நெம்பர் 77,49,36,18,_.
10. உங்ககிட்ட 100 ரூபாய் இருக்கு. இதுக்கு நீங்க சில்லறை மாத்தணும் பிறகு உங்க கிட்ட மொத்தமா 50 காயின்கள் இருக்கணும், ஆனா ஒரு 2 ரூபாய் கூட இருக்க கூடாது. எங்க மாத்திட்டு வாங்க பாக்கலாம்.
நல்லா யோசிச்சு சொல்லுங்க. ஒன்றுக்காவது விடை சொல்லிட்டு போங்க பாஸ்.
ட்விட்டரில் பெண்கள் மிக குறைவு. 140 Characters எல்லாம் அவர்களுக்கு ஒத்து வராதவிஷயம் :)
_kaarthik0106@twitter.com
சாருவுக்கு எழுத்தாளர்கள் இங்கு வறுமையில் வாழ்வதாக ஒரு எண்ணம்! கலைஞர் எனும் எழுத்தாளர் எழுதி சம்பாதித்த விபரத்தை தினசரிகளில் கண்டு தெளியவும்!
_rajan_allinall@twitter.com
6 comments:
உங்கள் தளத்திற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
விடைகள்:
1. 22
3. 144
4. 5, 105
9. 8
5.888+88+8+8+8=1000
6.first ball டோனி 6
second ball runout
third ball yuvraj 6
எனக்கு எந்த விருதும் வேனாம்..(தெரியல பா என்ன பண்ணுறது)
1. கையில் இருக்கும் ரூ.15இல், 15 தான் வாங்க முடியும். இதில் எவ்வளவு சாகலேட் கிடைக்கும் என்றால் 15+5+1+1=22 ஹிஹி, பாயின்ட் பிடிச்சிருவோம்ல!
2. 2 பழம் இருக்கும் கூடையில கை வச்சா தெரியும் அதுல 2 இருக்குன்னு. மற்ற பழம் லேபில் மாறி இருக்குன்னா, தவறான லேபில் வைத்து சரியாச் சொல்லிடலாம். / நீங்க லேபில் பத்திச் சொல்லியிருக்கணுமோ?
3. 9*(7+9)=144
4. சேலை: ரூ.105, ஜாக்கெட்: ரூ.5. கல்யாணம் ஆகியிருந்தாலும், அந்த ஆணுக்கு எப்படியும் இந்த கணக்குப் புரியப் போறதில்லை, எதுக்கு இந்த கவலை?
5. 888 + 88 + 8 + 8 + 8=1000
6. இது இன்ஃபோஸிஸ் கேள்வி மக்கா, இணையம் முழுக்க பதில் இருக்கு.
7. 204.
8. இந்திய ஜோக் வரிசையில ஆங்கில எழுத்துக்களை வைத்து ஸால்வ் செய்யலாம். இல்லை, எப்பவும் சொல்ற (2/10)*0 = 2*0; 0=0 எனவே இடது=வலது.
9. 8
10. 8காயின்*5ரூ=ரூ40; 40காயின்*1ரூ=ரூ40; 2காயின்*ரூ10=ரூ20 , ஆக ரூ100. ஆக்சுவலா, உங்க வீட்டுல உங்க பர்ஸ்ல இருந்து எடுத்திட்டு வந்தது.
நான் ட்விட்டரில் இருக்கிறேன், பெண்ணானாலும். குறிப்பாக, உங்க கருத்தைப் பார்த்துட்டு, மேலே இருக்கும் ஒவ்வொரு விடையும் 140எழுத்துகளுக்குள் வைத்திருக்கிறேன்.
நீங்க உண்மையிலேயே மாணவர் தாமென்றால், இந்த கணக்குகளில் ஆர்வம் காட்டுவது நல்லா இருக்கு!! வாழ்த்துகள்.
அப்புறம்?
என்னங்க பாஸ் பலே பாண்டியானு பேர் வெச்சி பலே வாத்தியா மாதிரி பண்ணி இருக்கீங்க
க்ரிகெட் ரூல்ஸ் கொஞ்சம் மறந்து போச்சு - ரன் அவுட் ஆனா பேடிங்க் முனை மாறினாங்கன்னு எப்படி நிச்சயமா சொல்றது?
அப்பாதுரை சார்,
4 கேள்வி புரியலையா? இல்லை 4வது கேள்வி புரியலையா? ஏனென்றால், மொத்தம் 10 கேள்வி:-)
4வது கேள்வி புரியலை என்றால், அதுக்குத் தான் ”உங்களைப் போன்றவர்களு”க்காக டிஸ்கி கொடுத்திட்டேனே! 105+5=110; 105-5=100. டிஸ்கிக்குக் காரணம் இது தான்; ஜாக்கட்டுக்கு ரூ5 விலை எல்லாம் சான்ஸே இல்லை. வேட்டி துண்டுன்னு சொல்லியிருந்தாக் கூட நம்பலாம். இது வெறும் ஆணாதிக்கக் கேள்வி. ஹிஹி!
Post a Comment