Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/
Showing posts with label Computer Tricks. Show all posts
Showing posts with label Computer Tricks. Show all posts

Friday, January 14, 2011

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?

நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 


 Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.




இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.


இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.


எப்படி pen drive ஐ பாதுகாப்பது??


1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )

2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.

3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.

4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.

5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.

6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.

7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர்
USB-Disk-Security

◘பலே ட்வீட்◘
நெடு நாள் களித்து இரு நண்பர்கள் சந்திக்கும் பொது அங்கு ஒரு காதலும் நினைவு படுத்த படுகிறது / கடுப்பேத்தரான் மைலார்ட்
                                                                           _karaiyaan@teitter.com

அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை கடல் இருக்கிறவரை. # நகுலன்.
                                                                           _kuttysuvaru@twitter.com

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் பெயர்: கருணாநிதி அறிவிப்பு # அப்படியே மார்ச்சுவரிக்கும் ஈழம்னு பேர் வெச்சு சந்தோசப் பட்டுக்கங்கடா
                                                                            _raja_allinall@twitter.com

Tuesday, January 4, 2011

பதிவொன்று பலன் பத்து !!

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பத்து பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை காணப்போகிறீர்கள். படித்து விட்டு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும்.






1.ATM card வச்சு இருக்கீங்களா?? 

24X7 Customer Helpline for ATM card holders
1800 11 22 11 - Toll Free Number (From BSNL/MTNL)
080-26599990 - (Through any Landline or Mobile)

For ATM related Services:
> ATM Card/PIN delivery status
> Lost Card/Card Blocking/Hotlisting
> Details of other value added services available – of State Bank ATMs
> State Bank ATM locations/addresses
> Guidance for Card usage at ATMs and Point of Sales.

2.உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஐ ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ??

Run---> inetcpl.cpl
இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.

3. Google URL Shortener எதற்கு??

Go...

இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய  URL ஐ மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

4. Hardware Helping Sites வேண்டுமா ??


5. உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா?? 

உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??. கவலை வேண்டாம். நீங்கள் அதை உடனே ON செய்யாமல் இருந்தால் போதும். உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால்  அதனை Sucksion mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner  இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம் ( அடுப்படி?? ). பின்னர் ஒரு கடையில் கொடுத்து பார்ப்பது நல்லது.

6.Need Serial Key for your சாப்ட்வேர்??

For Serial Key of any Software,
Just Go to:
Open it Then search with software name & Click on view S/N
எல்லாமே கிடைக்கும் என்று என்னால் சொல்ல முடியாது நண்பர்களே.!!

7. Toll Free Numbers for computer Problems solving??

TOLL FREE NUMBERS For any PC problems
AMD-18OO4256664
Dell-18OO444O26
HCL-18OO18O8O8O
IBM-18OO443333
Microsoft-18OO1111OO

8. keyboard shortcut keys எல்லாம் தெரிந்து கொள்ள எங்கே?? 

Computer keyboard shortcut keys
It has List of all Computer
shortcut keys 4 applications.

9. Online இல் you tube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி??


youtube  வீடியோ URL ஐ இங்கு paste செய்து Download செய்யலாம்.

10. தேவை இல்லாத program start ஆகுவதை தடுப்பது எப்படி?? 

Run--> msconfig

Start up என்ற  பகுதியில் தேவை இல்லாத Program களை கிளிக் செய்துள்ளதை unmark செய்து ok கொடுக்கவும். அவை ஸ்டார்ட் ஆவதை நீங்கள் Computer On ஆகும் போது தடுத்து விட முடியும்.







◘பலே ட்வீட்◘
 

மனுசனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெருசா சாதிக்கணும். நல்லவேளை, நான் குழந்தையாத்தான் பொறந்தேன்.!
                                                                                                                  _writercsk@twitter.com

Sunday, December 5, 2010

மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்

 வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு  GPRS உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE   (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.
சென்ற கம்ப்யூட்டர் பதிவில் நான் நோக்கியா PC SUITE பற்றி தெளிவாக கூறி இருந்தேன். அதை படிக்க கீழே சொடுக்கவும். 


இப்போது  உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC SUITE வசதியினை  அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS connect செய்ய  நமக்கு அதற்கு உரிய செட்டிங்க்ஸ் வேண்டும்.  எனவே உங்கள் customer care ஐ தொடர்பு  கொண்டு இந்த வசதியினை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

நான் இங்கு சில நெட்வொர்க்களுக்கு எப்படி என்பதை சொல்லி விடுகிறேன்.

AIRTEL: இதற்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள அவசியம் இல்லை, உங்கள் மொபைல் இல் GPRS இருந்தால் சிம் போட்ட உடனேயே அவர்களே செட்டிங்க்ஸ்களை அனுப்பி விடுவர்.

AIRCEL :  இதற்கு ஒரு சிறு வேலை உள்ளது.  "GPRS BP NOK 3110" இதனை  "57788" என்ற எண்ணுக்கு அனுப்பவும். பின்னர் வரும் மெசேஜ்க்கு "YES BP" என்று  reply செய்யவும்.  இப்போது சிறிது நேரத்தில் உங்களுக்கு செட்டிங்க்ஸ் வந்து விடும்.
இதனை அவர்கள் மெசேஜில் சொன்னபடி save செய்து கொள்ளவும்.

* NOK என்பது நோக்கியா போனுக்கு மட்டும், மற்றும் உங்கள் உங்கள் போன் மாடலை  அடுத்ததாக டைப் செய்து அனுப்பவும்.
* மற்ற மாடல்கள் உள்ளவர்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும்.
* சென்னை பயனர்களுக்கு இந்த முறை வேறுபடலாம்.

VODAFONE, DOCOMO, மற்றும் மற்ற சந்தாதாரர்கள் அவர்கள் customer care ஐ தொடர்பு கொண்டு இந்த வசதி எப்படி  என்பதை தெரிந்து கொள்ளவும்.

இந்த வசதிகள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் நோக்கியா போன் வைத்து இருந்தால்

S40:  1 .Menu-->Settings--> configuration Settings--> default configuration settings (choose "mobile office" for airtel users, choose "Aircel Office PR" or "Aircel(--> web)" for aircel users ).
then,  configuration Settings--> preferred access point(select that what you choose in the above)
 and 
2 .Menu--> Web--> Settings--> Configuration settings இதிலும் நீங்கள் மேலே உள்ளது படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது அதன் படி மாற்றி கொள்ளவும். 

S60: same in the above, with small changes as per your mobile menu settings.

இப்போது உங்கள் மொபைல் இல்  நீங்கள் இன்டர்நெட் connection   ஐ ஓபன் செய்து "homepage" செல்லவும் அது கூகுள் homepage க்கு சென்றால் நீங்கள் செய்தது சரிதான்.

இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.

நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். இப்போது கீழ்வரும் விண்டோ  ஓபன் ஆகும்.


இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum failed என்றே வரும்.  வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள்   மொபைல் மாடல் தெரியும்.


இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.



இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose செய்யவும்.

AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,.....இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்

 கீழே உள்ளது AIRCEL பயனர்களுக்கு மட்டும்:

ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect செய்ய முடியும்.  இந்த விண்டோவிலேயே manual பொத்தான் உள்ளது.   இதனை அப்போது கிளிக் செய்யவும்.




அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில் 


Access Point என்பதில் "aircelgprs.pr" என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்.

அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.

இப்போது நீங்கள் இன்டர்நெட் க்கு என தனியாக recharge செய்து கொள்ளவும்.

Aircel: ரூபாய் 14 (3days), 29(7 days), 98(30 days) (எல்லாமே Easy recharge தான் )

Airtel: ரூபாய் 5(1 day),17(3days),98(30 days) (உங்கள் balance இல் இருந்தே எடுத்து கொள்வார்கள், அல்லது 98 க்கு recharge செய்து கொள்ளலாம்.) 

ஏதேனும் புரியவில்லை எனில் கேட்கவும். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். 

டிஸ்கி: நீங்க இத வச்சு browse மட்டும்தான் பண்ண முடியும்.(ஸ்பீட் 460.8 kb) . நீங்க இத வச்சு  எந்திரன் படம் டவுன்லோட் பண்ண ஒரு மூணு மாசம் ஆகும். 
இத வச்சு நீங்க ஜிமெயில் slow connectionல ஓபன் பண்ணலாம், மத்தபடி எல்லாமே ஓபன் செய்யலாம்.ஆனால் 3ஜி  வரப்போவதால் இதன் ஸ்பீட் மேலும் அதிகரிக்கும்.

ரியல் டைம் example: நான் தாங்க .

அப்புறம் அய்யா சாமி படிச்சுட்டு  எதையாவது கீழ எழுதிட்டு போங்க.






◘பலே ட்வீட்◘

எல்லா பிச்சைக்காரர்களிடத்தும் ஏதேனும் ஒரு நாய் அன்புடன் இருக்கிறது! 
                                                                                                   _sramanaa@twitter.com



Sunday, November 21, 2010

கம்ப்யூட்டர் Accessing Speed அதிகம் ஆக

வணக்கம் நண்பர்களே......
சிலருக்கு அவங்க கம்ப்யூட்டர்  Accessing ஸ்பீட் அல்லது performance ரொம்ப மெதுவா இருக்கும். அதனை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்..
.
.
.

.
.
                                                                        1 .
சிலர் desktop  இப்படி இருக்கும். 


ரொம்ப பெரிய ஆள்னு காட்டனும் என்று சிலர் இப்டிலாம் வச்சு இருக்கலாம். 
இதெல்லாம் access ஆகவே ரொம்ப நேரம் ஆகுங்க்னா.
இங்க இருக்க  எல்லாமே Start Menu லயே இருக்கும்.


                                                                                    2 . 
நீங்க இன்ஸ்டால் பண்ற எல்லா software யும்   "C drive" ல install பண்ண வேண்டிய அவசியம்  இல்ல. எப்படி அத மாத்துறது.
நீங்க இன்ஸ்டால் பண்ணும் போது கீழ இருப்பது போல் window வரும்.  



இத இப்போ நீங்க C கு பதில் வேற ஒரு Drive கு மாற்றி கொள்ளவும். 


அப்போது Program Files என்ற ஒரு Folder ஒன்றை அந்த Drive இல் create செய்து கொள்ளவும்.

ஏனெனில் C டிரைவ் தான் உங்களின் System இன் windows வேலைகள் முழுவதையும் செய்து வரும்.(நீங்கள் எந்த Drive இல் OS install பண்ணி இருகின்றீர்கள்  என்பதை பொருத்து இது மாறும்.). உங்கள் C Drive இல் எப்போதும்  25 % free ஆக இருப்பது அவசியம். 
                                                                           
                                                                             3 .
Disk Cleanup 
Start Menu --->All Programs-----> Accessories----> System Files----> Disk Cleanup.

இங்கு நீங்கள் C Drive (அல்லது உங்கள் OS Drive ) செலக்ட் செய்து clean up கொடுக்கவும். இப்போது வரும் விண்டோவில் "Thumbnails" இ மட்டும் விட்டு விட்டு மற்றதை மார்க் செய்து clean up கொடுத்து விடவும்.


thumbnail என்பது நமது PC நம் picture,video, folder thumbnails களை store செய்து வைத்து இருக்கும். இதையும் மார்க் செய்து விட்டால். அது ஒவ்வொரு முறையும் access செய்யும். இதற்கு  நேரம்  தனியாக ஆகும்.  
                                                                          

                                                                            4.
 >>> நீங்கள் desktop ஐ அழகுபடுத்தும் எந்த software எதையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள். 

>>> PC ஐ ON செய்யும் முன்பு PenDrive ஐ செருக வேண்டாம்.

>>> ஒரு நேரத்தில் ஒரு file or folder ஐ மட்டும் copy செய்யவும்(ஒரு நேரத்தில் ஒரு copy மட்டும் செய்யவும்)

>>>uninstall செய்த  சாப்ட்வேர் இன் file கள்அந்த drive இல் அப்படியே இருக்கலாம். எனவே அதனை கண்டுபிடித்து Delete செய்து விடவும்.  

>>> எல்லாமே file களாக வைத்து இருப்பது, நீங்கள் ஓபன் செய்யும் போது உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சம் file  களை folder ஆக வைத்து கொள்ளவும். 

>>>Recylce pin இல்  உள்ள file களையும் அடிக்கடி பார்த்து  delete செய்து விடவும். 
>>> Run இல்  "%temp%" கொடுத்து file களை Delete செய்து விடவும்.

                                                                         5 .
இவை எல்லாமே நீங்கள் எந்த software உம் பயன்படுத்தாமல் seivathu . 
நான் பயன்படுதிய வரை "Tuneup " ஒரு நல்ல performance கொடுக்கும் சாப்ட்வேர்..

Registry  Cleaner Softwares
 1.TuneUp
2.Ashammpoo
3.CCleaner                                                   

                                                          <<வலையில் மாட்டியது>>

1 ,76 ,345 கோடி ரூபாய். யம்மாடியோவ்! பணம் என்னும் போது, பக்கத்துல நின்னு சிந்தியது சிதறியது எடுத்தாலே, நீலாங்கரையில் பீச் ஹவுஸ் கட்டி இருக்கலாமே. 
                                                                                                                 _jackoesekar@twitter.com

Tuesday, November 2, 2010

Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள

Computer Configuration என்றவுடன் சாதரணமாக My computer ஐ ரைட் கிளிக் செய்தல் வருவது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமானது இது.









உங்கள் computer இல்  எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Programs---> Run

டைப் "dxdiag" 

இப்போது நீங்கள் பின்வருமாறு ஒரு window ஐகாண்பீர்கள் 
 
இதன் முதல் வரியை கவனிக்க

1."This tool reports detailed information about the directX components and drivers installed on your system"
இதனால் உங்கள் computer இன் driver (software) problem களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
 
2. அத்துடன் இங்கே நமது driver softwares பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
(For display, sound, mouse, keyboard, )

அவ்ளோதாங்கணா!!!!!!!!



இன்றைய படம் & பாடம்






Bale Pandiya



 சிரிப்பு வந்தால் சிரியுங்கள். நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட... அதிகமாக சிரித்து அதிகமாக அழலாம்!!!!!!
                                   - "நீயா நானா கோபிநாத் "

Monday, November 1, 2010

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க


சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.
இதை அதிகரிக்க எந்த software உம் தேவை இல்லை.
பின்வரும் படிசெய்தால் போதும்.



கிளிக் programs--> Run
windows 7 க்கு programs---> search box---> Type "Run"


Run box இல் கீழே   உள்ளதை டைப் செய்ய
"gpedit.msc"





























அடுத்து கீழே உள்ள விண்டோ வரும் அதில் உள்ள  computer configuration ஐ   கிளிக் செய்ய
இனி பின்வரும்  படங்களில் உள்ளது போல் செய்யவும்.

























































































20 ஐ 0 ஆக change செய்யவும்.
























இப்போ OK or APPLY செய்யவும்.
அவ்ளோதான். !!!!!!!!!!!!!!!!!!!!


தமிழ் எழுதி

Followers