Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Thursday, February 3, 2011

Puzzles க்கு விடை சொல்லு, விருது பெற்றிடு!!- February 2011

வணக்கம் நண்பர்களே இந்த மாதத்துக்கான puzzles க்கு நீங்கள் ரெடியா. இப்போது வழக்கம் போல பத்து கேள்விகள். சரியான விடை கூறுபவர்களுக்கு Mister I.Q & I.Q Queen  விருதுகள். வாருங்கள் கேள்விகளுக்கு போவோம்.

1. இந்த தொடரில் அடுத்த எண்
60,30,20,15,?


2. பரபரப்பான ஒட்டப்பந்தயம், அதில் நீங்கள். இப்போது நீங்கள் இரண்டாவதாக ஓடும் நபரை முந்தினால் உங்கள் இடம்?


3. ஒரு ஓடும் பேருந்தில் 7 பெண்கள் ஏறுகிறார்கள் அவர்கள்  ஒவ்வொருவரிடமும் ஒரு பை வீதம் மொத்தம் 7 பைகள் உள்ளன. 7 பைகளிலும் 7 பெரிய பூனைகள் உள்ளன. ஒவ்வொரு பெரிய பூனை உடனும் 7 குட்டி பூனை உள்ளது. இப்போது  பேருந்தில் மொத்தம் எத்தனை கால்கள் உள்ளன?


4. 5 ஜீரோக்களை மட்டும் பயன்படுத்தி எண் 120 ஐ  உருவாக்க முடியுமா?


5. சிவப்பு, பச்சை, வெள்ளை என மூன்று மாளிகைகள் ஒரு ஊரில் உள்ளன. சிவப்பு மாளிகை நடுவிலும், பச்சை மாளிகை சிவப்பு மாளிகைக்கு வலதுபுறமும் இருந்தால் வெள்ளை மாளிகை எங்கு உள்ளது?


6.
100=500
200=600
300=700
400=800
500= ???


7. ஒரு சாலையில் 12 மரங்கள் வரிசையாக உள்ளன ஒவ்வொன்றும் 10 மீட்டர் இடைவெளியில் உள்ளன. எனில் முதல் மரத்துக்கும் கடைசி மரத்துக்கும் உள்ள தூரம் எவ்வளவு?


8. 50000 பேர் எழுதிய தேர்வில் 3000 பேர் தேர்ச்சி பெற்றனர்.  தேர்ச்சி பெற்றவர் பக்கங்களை வெளியிட பத்திரிக்கையில் 3 பக்கங்கள் தேவை, இங்கு 50000 பேரும் தேர்ச்சி பெற்று இருந்தால், தேர்ச்சி முடிவுகள் வெளியிட பத்திரிக்கைக்கு எத்தனை பக்கங்கள் தேவை?


9. மூன்று நண்பர்கள் கடலில் ஒரு படகில் மீன் பிடிக்க செல்கின்றனர். அப்போது அவர்கள் ஒரு முதலையிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் பின்வரும் எந்த வழியை பயன்படுத்தி தப்பிக்க முடியும்?

a) கடலில் குதித்து தப்பிப்பது
b) கையில் இருக்கும் துப்பாக்கியால் முதலையை சுட்டுக் கொல்வது
c) மீன்களை முதலையை நோக்கி வீசிவிடுவது
d) மூன்றும் இல்லை (எனில் உங்கள் கருத்து) 


10. சிறையில் மோகன் வக்கீலுடன் பேசுகிறான், அவனிடம் அரசாணை எதுவும் இல்லை ஆனால் வக்கீலுடன் பேசிய உடன் வெளியே வந்து விட்டான். இது எப்படி சாத்தியம்?

டிஸ்கி: இந்த பதிவுக்கு comment Moderation ON செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் அளிக்கும் விடைகள் இந்த பதிவின் விடைகள் வெளியிடும்போது பப்ளிஷ் செய்யப்படும்.
கருத்து மட்டும் பத்தாதுங்க எனக்கு உங்க ஓட்டும் வேணும். 

விடைகள், விருதுகள் 13/2/2011 அன்று  வெளியிடப்படும். நிறைய பேர் கலந்துகொள்ள இது உதவும்.



◘பலே ட்வீட் ◘


ஐந்து லட்சமும், வேலையும் தர நாங்கள் தயார். கடலில் மீன் பிடிக்க அரசியல்வாதிகள் தயாரா# TNfisherman
                                                                                                    _greatviji@twitter.com


அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசா: வீரமணி :: பெரியார் திரும்ப வரமாட்டாருன்னு பயபுள்ள என்னென்ன பேசுது
                                                                                                   _piliral@twitter.com

4 comments:

Philosophy Prabhakaran said...

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்... ஏதேனும் பரிசு இருக்கிறதா...?

பலே பிரபு said...

அட பரிசுதானே உங்களுக்கு இல்லாததா. ப்ரீயா இலங்கை கடலுக்கு ஒரு Tour arrange போன்றோம் போறீகளா?? (இதும் இலவசமானு கேக்ககூடாது )

Chitra said...

விடை சொல்லாமல், எஸ்கேப் ஆகிறதுக்கும் பரிசு கொடுக்கும் படி மனு கொடுக்கிறேன். மிக்க நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வெரும் ஆடியன்சா வந்துட்டுப்போறவங்களுக்கும் பரிசு அறிவிதால் நல்லா இருக்கும்.

Post a Comment

தமிழ் எழுதி

Followers