Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Monday, December 13, 2010

Aptitude: 3.Easy Squaring கத்துக்கலாம்

45^2 இதுக்கு உங்களால எவ்வளவு நேரத்துல விடை சொல்ல முடியும்?? 
உடனே கால்குலேட்டர் எடுத்து போடாதீங்க. என்னால 10   செகண்ட்ல விடை சொல்ல  சொல்ல முடியும்.
இந்த போஸ்ட் படிச்சபின் நீங்களும் இதனை செய்ய முடியும்.


இங்க நான் ஏன் 45ஐ எடுத்துக் கொண்டேன்  என்றால் நீங்கள் 5 என்று முடியும் எண்ணுக்கு எளிதாக square பண்ண  முடிந்தால் வேறு எந்த எண்ணுக்கும் எளிதாக செய்ய இயலும்.
இப்போ கணக்குக்கு வாருங்கள்
இங்கு நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது
  •  5 இல் முடியும் என்னை square செய்தால் உங்கள் விடையின் கடைசி இரண்டு இலக்கங்கள் 25 ஆக மட்டுமே இருக்கும்.

இப்போது 45 க்கு வாருங்கள்.

1 . 5 இல் முடிவதால் நிச்சயமாக கடைசி இரண்டு இலக்கம் 25 .
2 . இப்போது 4 உடன் 1 ஐ கூட்டவும் பின்னர் மற்றொரு 4 உடன் அதனை பெருக்கவும்.
அதாவது (4+1)*4=20. இதுதான் முதல் இரண்டு இலக்கம்.
45^2=2025 ..
3. இதே போல்தான் எந்த எண் 5 இல் முடிந்தாலும் இதனை நீங்கள் பின் பற்றலாம்.

 இது சுலபம் ஆகிவிட்டது  இப்போது மற்ற எண்களுக்கு எப்படி செய்வது??

எடுத்துக்காட்டாக 46 ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.

1.  சாதரணமாக உங்களால் ௦ வில் முடியும் எண்ணை எளிதாக square செய்ய இயலும். இப்போது நான் கூறியபடி செய்தால் உங்களுக்கு 5 இல் முடியும் எண்ணை square செய்வதும் சுலபம்தான்.
2. எனவே இப்போது இங்கு 46 க்கு அருகில் உள்ள எண்ணான 45 ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடைய square மதிப்பு உங்களுக்கு தெரியும் 2025.
3. இதனுடன் இப்போது 46+45=91  ஐ கூட்டவும். 2025+91=2116. இதுதான் விடை.

இதைபோல் நீங்கள் அடுத்த எண்ணை square செய்ய வேண்டுமானால் இரண்டு எண்ணையும் கூட்டி அதை அவைகளின் வித்தியாசத்தை வைத்து கூட்டி விடவும்.
அதாவது 47^2 க்கு 45^2  உடன் 45+47=92*2=184 ஐ கூட்டி விடவும். இதேபோல் எல்லா எண்ணுக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

இன்னும் ஒரு உதாரணம் இப்போது நீங்கள் 49 க்கு square செய்ய வேண்டுமெனில் 45^2க்கு செல்ல வேண்டாம்.நீங்கள் 50 ஐ square செய்து, அதில் இருந்து 50+49=99 ஐ கழித்து விடவும். இப்போது விடை 2401ஐ நீங்கள் எளிதாக பெறலாம்.


இதுதான் இங்கு மிக முக்கியமானது,

நீங்கள் 5 அல்லது 0 வில் முடியும் எண்ணை வைத்து மற்ற எண்களை square செய்யும் போது அது உங்கள் எண்ணை விட பெரிய எண்ணாக இருந்தால்(49 க்கு 50) இரண்டு எண்களையும் கூட்டி அதன் வித்தியாசத்தால் பெருக்கி கழித்து விடவும். அதே சிறிய எண்ணாக இருந்தால்(47 க்கு 45) நீங்கள் இரண்டு எண்களையும் கூட்டி அதன் வித்தியாசத்தால் பெருக்கி கூட்டி விடவும்.

இது ஏற்கனவே தெரிந்து இருந்தால் உகளுக்கு மிகவும் எளிதாக இது தெரியும், மேலும் இதை விட கடினமான aptitude கேள்விகளை தொடரும் போஸ்ட்களில் காண்போம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம்.




◘பலே ட்வீட்◘
ஒட்டு கேட்பது ஆனந்தம் என்றால் பிரபலங்களின் உரையாடல்களை ஒட்டுகேட்பதேன்பது பரமானந்தம் #நீராராடியா #ஒலிநாடாக்கள்
                                                                                                            _piliral@twitter.com
ஈழம் என்று ஒன்று இருப்பதை அடிக்கடி நினைவுபடுத்துவது விகடன் மட்டுமே# பேய் ஆட்சி செய்தால் (ஆனந்த விகடன் )
                                                                                                          _baleprabu@twitter.com



0 comments:

Post a Comment

தமிழ் எழுதி

Followers