Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Sunday, December 19, 2010

தெய்வத்தை கல்லாக்கி விட்டோம் குழந்தைகளை??

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு தோழி ஆமினா வின் "இது என்ன மாற்றம்??? " என்பதற்கு தொடர் பதிவு. என்னால் அவர்களுக்கு ஈடாக எழுதத் தெரியுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் என்னால் முடிந்ததை நான் எழுத விழைகிறேன்.
நான் இந்த தொடர்பதிவை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நம் ஒவ்வொருவருக்கும் நம் சமூகத்தின் மீது சில வருத்தங்கள், கோபங்கள் இருக்கும் . என்னுடையது நம் சமூகத்தில் குழந்தைகளின் நிலைமை குறித்தது. இதனை மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார் ஆமினா.

என்னுடையதை நான் நான்கு விசயங்களாக பிரித்து கொள்கிறேன்.

முதலாவது,


அன்று பாரதி பாடினான்,

"காலை முழுவதும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா"

இன்று நம் குழந்தைகள் தமிழ் கட்டாய பாடம் என்பதால் இதன் அர்த்தமே புரியாமல் தான் படிக்கின்றார்கள்!
தமிழின் அடையாளமான ஒரு புலவனின் பிறந்தநாளுக்கு குறுஞ்செய்தி அனுப்பாத நாம் மறுநாள் ரஜினியின் பிறந்த நாளுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொல்கிறோம்.யாருடைய தவறு இது??
தடதடவென பேசுகின்றன இன்றைய குழந்தைகள். ஆனால் நம் தமிழில் இல்லை. பெருமையாகத்தான் இதை சொல்கின்றனர் எல்லா பெற்றோரும்.


"மாமாவை சித்தப்பா என்றமைக்கு
அடி வாங்கினேன் நான்!!
சித்தியை அத்தை என்றமைக்கு
அடிவாங்கினாள் தங்கை!!
அம்மாவை அம்மா என்றமைக்கு
அடிவாங்குகிறது என் குழந்தை!! "


இன்று அந்த பிள்ளை அம்மா, அப்பா என்று அழைக்கும் முன்பே மிஸ், ஸ்கூல் என்று உளறுகிறது. 10 கிலோ குழந்தை 50 கிலோ பாட புத்தகத்தை தூக்கி செல்கிறது. அந்த பிள்ளைகளை ஒலிம்பிக்குக்கு அனுப்பி இருந்தால் பத்து தங்கமாவது கிடைத்து இருக்கும்!!.

திருமணத்திற்கு வயது வரம்பு கொடுத்த அரசாங்கம் இந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் வயதை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் கொஞ்ச காலமாவது குழந்தைகளாக இருப்பார்கள்.

இரண்டாவது,


"நான் இப்படி ஆக நினைத்தேன் முடியவில்லை நீயாவது அப்படி ஆக வேண்டும்."
உலகிலேயே மிகக் கொடுமையான எண்ணம் இதுதான். உங்களை போல வாழ்வதற்கு குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை வாழவில்லையே.

படம் வரையும் குழந்தையிடம் பயில்வான் ஆக சொல்லாதீர்கள். கொஞ்சம் தூரிகை வாங்கி தாருங்கள், வருங்கால பிக்காசோ என் குழந்தை என் சொல்லி கொள்ளுங்கள். ஏன் என்றால் பெரியவர்கள் மனம் இதற்க்கெல்லாம் உடைவது அல்ல.ஆனால் குழந்தைகள் உடைந்து விடுவார்கள். இது வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும் உங்களுக்கும் கூட இது இருக்கலாம்.

இப்போது நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் "என் தந்தை என்னை இப்படி ஆக்கவில்லை எனவே நான் என் பிள்ளையை இப்படி ஆக்கிடுவேன்."
கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள் "என் தந்தையால் என் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் நான் என் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவேன்." அவ்ளோ தான் நண்பரே.

மூன்றாவது,


இன்று நிறைய குழந்தைகள் மேலே உள்ள பாரதியின் மூன்றாம் வரிக்கு செல்வதே இல்லை. ஆம் விளையாட்டு என்பதை கணினியும், தொலைக்காட்சியும் தான் நம் குழந்தைகளுக்கு காட்டுகின்றன.


"மாலை முழுவதும்
விளையாட நேரமில்லை
பேருந்துக்கு நிற்கும்
காலையின் சில
நிமிடங்களிலேயே முடிந்து
விடுகிறது பாதி
விளையாட்டு!
மீதிக்குத்தான் நாள் முழுவதும்
காத்திருகின்றன,
சூரியனும், சாலை ஓரமும்!!"



“எண்பது வயது வரை நன்றாக இருந்தார் என் தாத்தா!
அறுபது வயது வரை ஆடிப்பாடினார் என் தந்தை !
பெருமையாதான் உள்ளது,
கூடவே ஆச்சர்யம்!!
ஐந்து வயதிலேயே
மூட்டை பிடித்த என் குழந்தையை பார்த்து!! "


தினமும் கொஞ்சம் நேரமாவது குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். இல்லாவிடில் நீங்கள் தான் குழந்தைகள் வாழ்க்கையோடு விளையாடுவதாக அர்த்தம். உங்களுக்கு யார் விளையாட்டு முக்கியம்??


நான்காவது, 


"இன்னிக்கு
ஸ்கூல்ல என்ன
ஆச்சு தெரியுமா??..............
.
.
.
தாயிடம் சொல்லவேண்டியதை,
செல்ல நாயிடம்
கூறுகின்றன குழந்தைகள் !!!!"


நாம் இன்று நம்முடைய பரபரப்பான நாட்களில் குழந்தைகளுக்கு என்று நேரம் ஒதுக்குவதே இல்லை. உங்கள் உழைப்பு எல்லாம் பிள்ளைகளுக்கு என்றால் முதலில் பாசத்தை கொடுங்கள் பணத்தை பின்னர் கொடுக்கலாம். தினமும் ஒரு அரை மணி நேரம் உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். பேச்சின் முடிவில் நீங்கள்தான் குழந்தையாக இருப்பீர்கள். 

உங்கள் அம்மா, அப்பா இருந்தால் அவர்களுடன் இணைந்து பேசுங்கள். நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். இதில் ஏற்ப்பட்ட தவறுதான் இன்று முதியோர் இல்லங்கள் இருக்க காரணம். 

எனவே குழந்தைகளை கொஞ்ச காலம் குழந்தைகளாக இருக்க விடுங்கள். ஏனெனில் அந்த உலத்தில் தான் கவலை இல்லை, கபடம் இல்லை. காத்திருக்கலாம் பழம் கனியும் வரை அப்போதுதான் அது சுவைக்கும்.

தெய்வமும் குழந்தையும் ஒன்று என்றே கூறுவார்கள். தெய்வத்தை கல்லாக்கி விட்டோம், குழந்தையை அந்த முயற்ச்சியில் இருக்கிறோம் என்ற உண்மையே இன்றைய நிலைமை.

இந்த பதிவு உங்கள் மனதில் இந்த நிலையை உடைத்தால் அதுவே இந்த பதிவின் வெற்றி. படித்த ஒவ்வொருவரும் கருத்து கூற வேண்டும் என்பது என்பது இங்கு என் எண்ணம்.








◘பலே ட்வீட் ◘

தேடல் என்ற ஒன்று எவரிடம் எதைநோக்கி இருந்தாலும் அதன் முடிவு அன்பு என்ற சொல்லில் மட்டுமே முடியும்.
                                                                                                                     _kuttysuvaru@twitter.com


19 comments:

எல் கே said...

நல்ல கருத்துக்கள் நண்பா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா, வருங்கால் சந்ததிக்கு பெரும்பாலான உருவு முறைகள் மறந்து விடும். அனைவரையும் இப்பொழுது அங்கிள் அல்லது ஆண்டி தான் . அது சித்தப்பாவாக இருந்தாலும் சரி மாமனாக இருந்தாலும் சரி

ஆமினா said...

திருமணத்திற்கு வயது வரம்பு கொடுத்த அரசாங்கம் இந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் வயதை நிர்ணயிக்க வேண்டும். ///

செம பாயிண்ட்....
பலமுறை நானும் இதை யோசித்து இருக்கேன்.....

கலக்கல்

ஆமினா said...

////படம் வரையும் குழந்தையிடம் பயில்வான் ஆக சொல்லாதீர்கள். கொஞ்சம் தூரிகை வாங்கி தாருங்கள்,

கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள் "என் தந்தையால் என் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் நான் என் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவேன்." அவ்ளோ தான் நண்பரே.

இல்லாவிடில் நீங்கள் தான் குழந்தைகள் வாழ்க்கையோடு விளையாடுவதாக அர்த்தம்.

தாயிடம் சொல்லவேண்டியதை,
செல்ல நாயிடம்
கூறுகின்றன குழந்தைகள் !!!!"////

ஓவ்வொரு வரியும் தனித்தனியாக எடுக்க முடியவில்லை. எல்லா வரிகளும் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது... இன்றைய நிலையை அழகாக வகைபடுத்தி சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

//இந்த பதிவு உங்கள் மனதில் இந்த நிலையை உடைத்தால் அதுவே இந்த பதிவின் வெற்றி. ///
கண்டிப்பாக. ஓவ்வொரு வார்த்தையும் வார்த்தைகளாய் அன்றி ஈட்டி போல் என் மனதை குத்துவது தான் உண்மை. நானும் என் பிள்ளை வளர்ப்பில் எதாவது தவறு செய்கிறோமா என ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிட்டது.....

ஆமினா said...

//என்னால் அவர்களுக்கு ஈடாக எழுதத் தெரியுமா எனத் தெரியவில்லை. //
ஐய்யய்யோ நான் என்ன சொல்வேன்? லிங்கை வேற குடுத்துட்டீங்களே...
சத்தியமா உங்க பதிவை ஏணி வச்சா கூட என் பதிவால எட்ட முடியாது சகோ....

கலக்கலா எழுதி இருக்கீங்க. முதலில் தலைப்புக்கு பெரிய பூங்கொத்து வாங்கிக்கோங்க :)

தொடர்பதிவுன்னு சொல்லி பிறகு யாரையும் அழைக்கலையே ஏன்??? அவரவர் பார்வையில் என்ன நினைக்கிறார்கள் என அறிந்துக்கொள்ள ஆசை...
அவங்களா வருவாங்கன்னு எதிர்பாக்காம யாரையாவது 4 பேரை மாட்டிவிடுங்க தொடர்பதிவுக்கு..... இது என் அன்பான வேண்டுகோள்

Lakshmi said...

மிகவும் அருமையான பதிவு. இன்றைய ப்ற்றோர்களை யோசிக்கவைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.

பலே பிரபு said...

@ஆமினா said...
//தொடர்பதிவுன்னு சொல்லி பிறகு யாரையும் அழைக்கலையே ஏன்??? அவரவர் பார்வையில் என்ன நினைக்கிறார்கள் என அறிந்துக்கொள்ள ஆசை...
அவங்களா வருவாங்கன்னு எதிர்பாக்காம யாரையாவது 4 பேரை மாட்டிவிடுங்க தொடர்பதிவுக்கு..... இது என் அன்பான வேண்டுகோள் //

நான் இங்கு புதியவன் என்பதால் என்னுடைய இந்த பதிவுக்கு யாரை அழைப்பது என்பது தெரியவில்லை. நான் அதிக வலைப்பூக்களை இங்கு படித்தது இல்லை. இருப்பினும் நான் இதுவரை படித்ததில் சிறந்த சிலரை அழைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் எழுதவும்.

"தொப்பி தொப்பி"

"கெக்கேபிக்குணி"

"நல்ல நேரம் " சதீஷ்

"கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா

"ஸ்டார்ட் மியூசிக்!"பன்னிக்குட்டி ராம்சாமி

"எதுவும் நடக்கலாம்! " எஸ்.கே

இவர்கள் மட்டும் இன்றி விரும்புபவர்கள் இதை எழுதவும்.

வேண்டுகோளை நான் நிறைவேற்றி விட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி மக்கா இப்பிடி மாட்டி விட்டுட்டியே..... சரி களத்துல குதிப்போம்.......!

THOPPITHOPPI said...

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.

கண்டிப்பா எழுதுவேன்

எஸ்.கே said...

ரொம்ப நல்ல விஷயத்தை சிறப்பா எழுதியிருக்கீங்க! நிச்சயம் தொடர்பதிவு எழுதுகிறேன்!

Chitra said...

குழந்தைகளை குறித்த இந்த பதிவில், அக்கு வேறு ஆணி வேறாக - எல்லாவற்றையும் அலசி விட்டீர்களே.... அனைத்தும் சுடும் நிஜங்களே....

Chitra said...

தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றிங்க... தலைப்பு அல்லது டாபிக் என்னவென்று மட்டும் சரியாக தாருங்களேன்.... குழந்தைகளை பற்றி நீங்கள் எழுதி இருப்பதே நன்றாக இருக்கிறதே....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அவசியமான பகிர்வு.. குழந்தைகளிடம் ஒரு அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதிக்கிறேன்..
நீங்க சொல்றது சரி தான்..

நிறைய கருத்துக்கள் ஆணி அடித்தாற்போல எழுதி இருக்கீங்க..

மொத்த பதிவும்....நல்ல கருத்துக்களுடன்..! பகிர்வுக்கு நன்றி.. :-)

Philosophy Prabhakaran said...

பெற்றோர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறீர்கள்... நல்லது...

மாணவன் said...

//தெய்வத்தை கல்லாக்கி விட்டோம் குழந்தைகளை??//

நல்ல ஒரு விரிவான பார்வை குழந்தைகளைப் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் இதை படிக்கின்ற பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் நண்பரே

தொடர்ந்து இது போன்ற சிறப்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி நண்பரே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கருத்துக்கள் அருமை! பேணப்படவேண்டியவை! ஆனால் இதைப் படிக்கும் பெற்றோர் பலர் இதைப் பேணுவார்களோ? தெரியவில்லை. காரணம் அவர்களின் அடுத்தவீட்டுப் பெற்றோர் இதைப் படித்துப் பேணுவேராக இருக்கவேண்டும்.
நாம் அடுத்தவீட்டில் என்ன? செய்கிறார்கள் என்று பார்த்து வாழ்கிறோமே தவிர , எமக்கு எது தேவை என நினைத்து செயல்படுத்துவோர் அல்ல.
அந்த வகையில் எக்காலத்திலும் எவர் கூறியும் மாற்றம் வரும் எனும் நம்பிக்கை எனக்கில்லை.
இன்றைய குழந்தைகள் உண்மையில் பாவப்பட்டோரே!

பலே பிரபு said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
நன்றி நண்பரே!!

@தொப்பிதொப்பி
நன்றி நண்பரே!!

@எஸ்.கே
நன்றி நண்பரே!!

@சித்ரா
நன்றி தோழி!!

@philosophy prabhakaran
நன்றி நண்பரே!!

@மாணவன்
நன்றி நண்பரே!!

@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி நண்பரே!!

@யோகன் பாரிஸ்(Johan-Paris)
நன்றி நண்பரே!!

Chitra said...

லீவ் முடிந்து வந்த பின், அடுத்த வருடம் எழுதுகிறேன். :-)

கெக்கே பிக்குணி said...

என் லீவு முடிஞ்சு அடுத்த வருடம் வந்து (சித்ரா, ஹிஹி), நான் பதிவு போட்டுட்டேன். அழைப்புக்கு நன்றி. உங்க அளவுக்கு விவரமா எழுதலை... பாருங்க‌: http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post.html

Post a Comment

தமிழ் எழுதி

Followers