Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Wednesday, December 15, 2010

Aptitude4: Square Root Answer ஈசியா கண்டுபிடிக்கலாம்

square root செய்வது Aptitude இல் மிக முக்கியமான  ஒன்று. இதனை எப்படி செய்வது மிகவும் எளிதாக  என்பதை இங்கு காண்போம்.
 இன்றைய நிலைமையில் aptitude என்பது தெரிந்தால் தான் கல்லூரி மாணவர்கள் தங்கள் வேலைக்கான முதல் படியை கடக்கவே முடிகிறது.ஒரு மாணவனாக நான் உணர்ந்தது இது. எனவே உங்களுக்கு தெரிந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதனை நீங்கள் பரிந்துரை செய்யலாம்.

நாம் விசயத்துக்கு வருவோம்,
சென்ற பதிவில் நான் எப்படி ஈசியாக Square செய்வது என்று சொல்லி இருந்தேன். அதை படிக்காதவர்கள் இங்கே செல்லவும். 


கண்டிப்பாக இந்த பதிவை படித்து இருந்தால் மட்டுமே கீழே உள்ளது உங்களுக்கு புரியும். 

இப்போது நாம் (2401)^1/2 க்கு இங்கு எளிதாக square root செய்வோம். 

இங்கு கடைசி எண்ணை கவனிக்கவும் அது 1. நான் இங்கு ஒரு எளிதான வழியை பயன்படுத்த போகிறேன். அதாவது ஒரு எண் 1 இல் முடிந்து இருந்தால் அதன் square root எண் கண்டிப்பாக 1,9 இல் தான் முடியும்.ஆனால் அது எந்த எண் என்பதை நாம் உறுதியாக கூறி விட முடியாது எனவே நாம் கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.

1.நீங்கள் முதலில் ௦ என முடியும் எண்களின் square களை காணவும். அதாவது 10 க்கு நூறு, 20 க்கு 400, இப்படியே செல்லவும் இது மிகவும் எளிதான ஒன்றுதானே.
(1 முதல் 9 வரை முடியும் எண்களின் square உடன் இரண்டு பூஜ்ஜியம் சேர்த்துக் கொள்ளவும்.)
100,400,900,1600,2500,3600,4900,....
இங்கு நமது எண் 1600 மற்றும் 2500 க்கும் இடைப்பட்ட எண்.  எனவே அதன் square root  41 அல்லது 49 . 
2. அடுத்ததாக நீங்கள்  45 இன் square ஐ கண்டுபிடிக்கவும். இதனை எளிதாக செய்ய நீங்கள் சென்ற பதிவின் மூலம் தெரிந்து இருப்பீர்கள். 45 இன் square 2025. நமது எண் 2401. இங்கு 2401 >2025 ஆக உள்ளது. எனவே நமது விடை கண்டிப்பாக 49.

இதை எப்படி மற்ற எண்களுக்கு பயன்படுத்துவது.

Number Square End
1 1
2 4
3 9
4 6
5 5
6 6
7 9
8 4
9 1

இதுதான் உங்களுக்கு எளிதாக square root கண்டு பிடிக்க வழி. இதை மட்டும் நீங்கள் நினைவில் கொண்டால் போதும்.


கவனிக்க இங்கு Numbers என்பது square root செய்யப்பட வேண்டிய எண்.  Square End என்பது அதன் விடையாக வரக்கூடிய எண்ணின் கடைசி எண். இங்கு 5 இல் முடியும் எண்ணை தவிர மற்ற எல்லா எண்ணுக்கும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இது எளிதுதான்.
புரியாவிடின் கேட்கவும்.







◘பலே ட்வீட் ◘
சுஜாதா / பாலகுமாரன்: அப்ப; ஜெமோ / சாரு: இப்ப. தன்னம்பிக்கை தான் புகழ் பெறுகிறது. எனினும், சாதாரணியான எனக்கு இதுவும் கடந்து போகும்.
                                                                                                          _kekkepikkuni@twitter.com
பொண்ணு கிடைத்தாலும் புத‌ன் கிடைக்காதாம். இன்று புத‌ன் கிடைத்துவிட்ட‌து. #யாராவதுஇருக்கிங்க‌ளா?
                                                                                                            _iamkarki@twitter.com

4 comments:

Philosophy Prabhakaran said...

//
பொண்ணு கிடைத்தாலும் புத‌ன் கிடைக்காதாம். இன்று புத‌ன் கிடைத்துவிட்ட‌து. #யாராவதுஇருக்கிங்க‌ளா? //

செம நக்கல்... சாளரம் கார்க்கி தானே அவர்...

வைகை said...

ரெம்ப நன்றி பாண்டியன்! ஒங்க பதிவ படிச்சிட்டு நெறைய பொண்ணுங்கள்ட்ட உதார் விடலாம் போல!

ஆமினா said...

ஆரம்பத்துல இருந்து கவனிச்சா தான் இந்த கணக்கு பாடம் தெரியும் போல :))

Anonymous said...

நல்வரவு. வந்தவுடன் அசத்தி விட்டீர்கள். இருப்பினும் அதிக இலக்க எண்களுக்கும் இவ்வாறு சொல்லி விடுங்கள். புண்ணியமாகட்டும். நல்ல தகவலுக்கு நன்றி.

Post a Comment

தமிழ் எழுதி

Followers