வணக்கம் நண்பர்களே நாம் இன்று NOKIA PC SUITE பற்றி தெரிந்து கொள்வோம்.
எத்தனை நிறுவனங்கள் போன்களை அறிமுகப்படுத்திய போதும், இந்தியாவை பொறுத்த வரை NOKIA வை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பதை அதன் ஒவ்வொரு புதிய மாடல்களும் நிரூபித்து வருகின்றது. அதன் PC Suite என்ற Application இன்று முக்கியமான ஒன்றாக உள்ளது. இது நோக்கியாவின் S40,S60 மாடல் போன்களுக்கு பயன்படுகின்றது.
கீழே உள்ள படம் நோக்கியா PC suite ஐ காண்பிக்கின்றது.
இதனை இலவசமாக Download செய்ய கீழே
நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால் செய்த பின்னர் மேலே உள்ள விண்டோ தெரியும்.
இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் இணைக்க data cable தேவைப்படும். பெரும்பாலும் போன் உடனேயே அது வந்து விடும். இல்லையென்றால் கடைக்கு சென்று உங்கள் போனை காட்டி data cable வாங்கிக் கொள்ளவும்.
இதை நீங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உங்கள் போன் உடன் இணைக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் இல் உள்ள pc suite ஐ ஓபன் செய்யவும்.(இதன் icon உங்கள் tool bar லேயே இருக்கும். போனை இணைத்து இறுதி இருந்தால் பச்சை நிறத்தில் indicate செய்யும் )
இப்போது கீழே உள்ள விண்டோ வரும். மேலே உள்ளதற்கும்(PC suite படம் ) இதற்கும் இப்போது உள்ள வித்தியாசம் இது போனின் மாடலை காண்பிக்கின்றது.
இனி அதன் ஒவ்வொரு ஐகானின் பயன்களை தெரிந்து கொள்வோம்.
BACK UP
இது BACK UP க்கு உதவும். இதனை கிளிக் செய்து நாம் நம் போனில் இருந்து தேவையானவற்றை நமது கம்ப்யூட்டர்க்கு BACK UP எடுத்து கொள்ளலாம். இதை மீண்டும் நீங்கள் உங்கள் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
SYNCHRONIZE
இது உங்கள் போனில் நீங்கள் புதியதாக சேர்த்த, மாற்றிய போன் நெம்பர்களை synchronize செய்ய பயன்படுகிறது. நெம்பர்கள் போன் மெமரியில் இருப்பது அவசியம்.
CONNECT TO THE INTERNET
இது PC suite இன் மிக முக்கியமான ஐகான். இதனைக் கொண்டு நம் போனின் மூலமாக கம்ப்யூட்டர் இல் இன்டர்நெட் connect செய்யலாம். இது பற்றி பின்னர் ஒரு போஸ்ட் மூலம் விரிவாக காண்போம்.
CONTACTS
இதன் மூலம் எளிதாக எல்லா எண்களையும் உங்கள் கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம்(ctrl+a, copy and save in a new folder in computer). மற்றும் எளிதாக குரூப்களை உருவாக்கி கொள்ளலாம். நேர விரயம் ஆகாது.
MESSAGES
இது உங்கள் மெசேஜ் களை காட்டும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்குபிடித்த மெசேஜ்களை கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம். 160 எழுத்துக்கு மேல் இருந்தால் 2 மெசேஜ் ஆக copy ஆகி விடும். (ctrl+A, copy in specific folder and save in new folder in computer ).
CALENDER
இது காலண்டர்.
FILE MANAGER
இது உங்கள் போனின் gallery . இதன் மூலம் நீங்கள் உங்கள் போன் அல்லது மெமரி கார்ட்க்கு தேவையானவைகளை copy செய்து கொள்ளலாம். இது கொஞ்சம் மெதுவாக இருக்கும்.
TRANSFER MUSIC
இது உங்கள் போன் க்கு கம்ப்யூட்டர் இல் இருந்து பாடல்களை COPY செய்து கொள்ள உதவும்
STORE IMAGES
இது உங்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் இமேஜ்களை கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ள உதவும்
TRANSFER VIDEOS
இது உங்கள் போன்க்கு வீடியோக்களை copy செய்யவும் அதில் உள்ள வீடியோக்களை காட்டவும் உதவும்.
INSTALL APPLICATIONS
நீங்கள் உங்கள் போனுக்கு தேவைப்படும் application , கேம் களை கம்ப்யூட்டர் இல் download செய்து பின்னர் இதன் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.
S40= Java Applications, S60= symbian SIS application.
UPDATE PHONE SOFTWARE'S
இது உங்கள் போன்க்கு புது software வந்து இருந்தால் அதனை UPDATE செய்ய உதவும். இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.
DOWNLOAD MAPS
இது நோக்கியா MAP களை டவுன்லோட் செய்து கொள்ள உதவுகிறது. இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.
இப்போது உங்களுக்கு நோக்கியா PC SUITE தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள்.
சாதி கொடுமையாக மட்டுமல்ல; சிலருக்கு ஆயுதமாகவும் சிலருக்கு கேடயமாகவும் கூட பயன்படுகிறது. !
_athisha@twitter.com
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான், கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் #வானம் #பாடலாசிரியர் வாழ்க
_Piliral@twitter.com