Puzzles solve பண்றது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். என் நண்பர்கள் என்னை மிஸ்டர் I .Q னு சொல்வாங்க அந்த அளவுக்கு. இப்போ நான் உங்களையும் மிஸ்டர் I .Q ஆக்க போறேன். ஆம் விளங்கா செய்திக்கு (Puzzles) விடை சொல்லி விருது வாங்கிட்டு போங்க.
பதில்களை பின்னூட்டத்தில் சொல்லவும். 5 சரியான விடை சொல்றவங்களுக்கு "மிஸ்டர் I .Q " னு விருது கொடுக்கலாம்னு இருக்கேன். அடுத்த பதிவில் அனைவர் பெயரும் அறிவிக்கப்படும்.
1 . எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் உலகின் மிக உயரமான சிகரம் எது??
2 . மே 15 ஐ நாம் இப்படி எழுதலாம், 15/5 (xy/z). எனில் இது போல ஏப்ரல் மாதத்திற்கு கீழ்வரும் குறிப்புகளை பயன்படுத்தி எழுதவும்.
1. y - x=z ;
2. x - y =z;
3. x + y =z;
4. x * y=z.
3. ஒரு தொட்டியில் நீங்கள் தண்ணீர் நிரப்பும் போது அது ஒரு மணி நேரத்தில் இரண்டு மடங்கு ஆகிவிடும். அது பதினாறு மணி நேரத்தில் நிரம்பினால் அது எப்போது அரை தொட்டி நிறைந்ததாக இருந்திருக்கும்?
4 . 12 இல் பாதி 7 என்கிறேன் நான். எதை பயன்படுத்தி நான் இதை நிரூபிக்க முடியும்?
5 4 இல் பாதி 5 என்கிறேன் நான். எதை பயன்படுத்தி நான் இதை நிரூபிக்க முடியும்?(நன்றி: ஆனந்த விகடன் )
6 . உங்கள் வலது கையில் கொடுக்கப்பட்ட ஒன்றை உங்களால் உங்கள் இடது கைக்கு மாற்ற முடியாது அது எது?
7 . இது இரண்டு ஆங்கில வார்த்தைகள் மொத்தம் 7 எழுத்துக்கள். இதில் நீங்கள் எத்தனை லெட்டர்களை எடுத்த போதிலும் இதன் அர்த்தம் மாறுவதே இல்லை. அது என்ன? (நன்றி: ஆனந்த விகடன் )
8 . இது ஆங்கிலத்தில்
How would you rearrange the letters in the words "New Door" to make one word?
இதற்கு சரியான விடைக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.
9 . ஒரு கார் விபத்தில் அப்பா இறந்து விடுகிறார் மகன் பிழைத்து விடுகிறான் . அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மகனைப் பார்த்த மருத்துவர், இவனுக்கு என்னால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது, ஏன் என்றால் "இவன் என் மகன்" என்கிறார் இது எப்படி சாத்தியம் ஆகும்?
10 . ஆங்கிலத்தில் நீங்கள் "தொடர்ச்சியாக" மூன்று நாட்களை கூற வேண்டும். ஆனால் அதில் Wednesday, Friday, Sunday ஆகியவை வரக்கூடாது. எப்படி?
நீங்கள் இடும் பின்னூட்ட விடைகள் பின்னர் publish செய்யப்படும். ஏற்கனவே கூறப்பட்ட விடைகளும் உள்ளன. விடை அல்லாத பின்னூட்டங்கள் மட்டும் உடனடியாக publish செய்யப்படும்
ஆங்கிலப் புத்தாண்டு இனிதே முடிந்தது. அடுத்தது அரசுக்காக தைப் புத்தாண்டு, ஆறுதலுக்காக தமிழ் புத்தாண்டு...# எத்தன புத்தாண்டு??
_kaattuvaasi@twitter.com
குற்றம் புரிவதால் நாடு கெட்டுப் போவது இல்லை. அந்த குற்றத்தை நியாயப்படுத்தும் அறிவு ஜீவுகளால் தான் கெட்டுப் போகிறது.!
_sridar57@twitter.com
ஸ்பெக்ட்ரம் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் எந்த பயனும் இல்லை# அப்ப நாயர் கடை பெஞ்சுக்கு வந்துடுங்க டீ சாப்டுட்டே பேசலாம்.
_vettipayal@twitter.com
8 comments:
//விளங்கா செய்திக்கு விடை சொல்லு, விருது பெற்றிடு!! ஜனவரி 2011//
நல்லாத்தான் இருக்கு படிச்சுப்பார்த்தேன், ஆனால் ஒன்னுக்கும் விடை தெரியல மூளைக்கு வேலை கொடுத்துட்டீங்களே பாஸ்....
சரி யோசிச்சுட்டு காலைல வரேன்...
//மிஸ்டர் I .Q னு சொல்வாங்க அந்த அளவுக்கு. இப்போ நான் உங்களையும் மிஸ்டர் I .Q ஆக்க போறேன். //
முதல்ல I .Q என்னான்னு சொல்லுங்க அதுவே எங்களுக்கு தெரியல...
(ம்கும் வெளங்கிரும்.... மைண்ட் வாய்ஸ்)
ஹிஹிஹி
// எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் உலகின் மிக உயரமான சிகரம் எது?? //
எவரெஸ்ட் சிகரமே தான்... அது invention அல்ல discovery...
// ஒரு தொட்டியில் நீங்கள் தண்ணீர் நிரப்பும் போது அது ஒரு மணி நேரத்தில் இரண்டு மடங்கு ஆகிவிடும். அது பதினாறு மணி நேரத்தில் நிரம்பினால் அது எப்போது அரை தொட்டி நிறைந்ததாக இருந்திருக்கும்? //
பதினைந்து மணிநேரம்...
சுவாரஸ்யமா தான் இருக்கு...எனக்கு தெரிஞ்ச சில பதில்களை மக்கள் ஏற்கனவே இங்கே சொல்லிட்டு போய்ட்டாங்க:)
சிறந்த பதிவு நண்பா எல்லோரையும் திண்டாட வைத்து விட்டீர்கள்.
நான் வரல இந்தப் போட்டிக்கு
//5 சரியான விடை சொல்றவங்களுக்கு "மிஸ்டர் I .Q " னு விருது கொடுக்கலாம்னு இருக்கேன்.//
பெண்களுக்கு இல்லையா? சரி விடுங்க ;)
1 . எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் உலகின் மிக உயரமான சிகரம் எது??
===> சொல்லிட்டாங்க. நான் பிறக்கறதுக்கு முன்னாலிருந்தே எங்க அக்காவுக்குத் தாத்தா தான் இப்பவும் அவங்களுக்குத் தாத்தா:-)
2 . மே 15 ஐ நாம் இப்படி எழுதலாம், 15/5 (xy/z). எனில் இது போல ஏப்ரல் மாதத்திற்கு கீழ்வரும் குறிப்புகளை பயன்படுத்தி எழுதவும். 1. y - x=z ; 2. x - y =z; 3. x + y =z; 4. x * y=z.
===> தல, விஜயகாந்த் டயலாக் மாதிரில்ல இருக்கு? என்னா சொல்றீங்க? (2.1) 5-1=4 where x=1,y=5, z=4 and 4 represents the month of April இப்படி தமிழ்ல புரியற மாதிரி சொல்லுங்க!
3. ஒரு தொட்டியில் நீங்கள் தண்ணீர் நிரப்பும் போது அது ஒரு மணி நேரத்தில் இரண்டு மடங்கு ஆகிவிடும். அது பதினாறு மணி நேரத்தில் நிரம்பினால் அது எப்போது அரை தொட்டி நிறைந்ததாக இருந்திருக்கும்?
===> 15 மணிநேரத்தில் அரை தொட்டி. அடுத்த ஒரு மணி நேரத்தில் அரைக்கு இரண்டு மடங்கான முழு. (தண்ணி தொட்டி, இம்புட்டு தண்ணியடிச்சாலும், ஸ்ட்ராங்குப்பா!)
4 . 12 இல் பாதி 7 என்கிறேன் நான். எதை பயன்படுத்தி நான் இதை நிரூபிக்க முடியும்?
===> இதுக்கு முன்னே மாதிரி ரெண்டு உளுந்து வடை (ரெண்டுத்திலியும் ஓட்டை உண்டு). XII என்கிற ரோமன் எண்ணைப் பாதியாக் கோடு போட்டா மேலே ஒரு ரோமன் VII. கீழ VII. ரெண்டாவது வடை, நான் முன்னே கொடுத்த பதில் மாதிரி, 12x0=7x0.
5 4 இல் பாதி 5 என்கிறேன் நான். எதை பயன்படுத்தி நான் இதை நிரூபிக்க முடியும்?(நன்றி: ஆனந்த விகடன் )
===> திரும்ப ரோமன் எண்ணை பயன்படுத்தி இதை நிரூபிக்கலாம். நான் விகடன் படிக்கிறதில்லை...
6 . உங்கள் வலது கையில் கொடுக்கப்பட்ட ஒன்றை உங்களால் உங்கள் இடது கைக்கு மாற்ற முடியாது அது எது?
===> க்ளவுஸ்
7 . இது இரண்டு ஆங்கில வார்த்தைகள் மொத்தம் 7 எழுத்துக்கள். இதில் நீங்கள் எத்தனை லெட்டர்களை எடுத்த போதிலும் இதன் அர்த்தம் மாறுவதே இல்லை. அது என்ன? (நன்றி: ஆனந்த விகடன் )
===> சரி வேற எங்கியாச்சும் வந்ததுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.
8 . இது ஆங்கிலத்தில்
How would you rearrange the letters in the words "New Door" to make one word?
இதற்கு சரியான விடைக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.
===> O N E W O R D
9 . ஒரு கார் விபத்தில் அப்பா இறந்து விடுகிறார் மகன் பிழைத்து விடுகிறான் . அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மகனைப் பார்த்த மருத்துவர், இவனுக்கு என்னால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது, ஏன் என்றால் "இவன் என் மகன்" என்கிறார் இது எப்படி சாத்தியம் ஆகும்?
===> மருத்துவர் உங்கள் பதிவில் மிஸ்டர் ஐ.ஃயூ பட்டம் வாங்க இயலாத பெண் ஜென்மம்.
10 . ஆங்கிலத்தில் நீங்கள் "தொடர்ச்சியாக" மூன்று நாட்களை கூற வேண்டும். ஆனால் அதில் Wednesday, Friday, Sunday ஆகியவை வரக்கூடாது. எப்படி?
===> மிடில்க்ளாஸ் மாதவி சைட்டில் ஏற்கனெவே கேட்டுட்டாங்க.
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
Post a Comment